Last Updated:Mar 09, 2026 7:00 PM IST
TVK Vijay | தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கும் அக்கட்சியின் பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் யார் தெரியுமா?

சென்னை மகாபலிபுரத்தில் நடந்த தவெக மகளிர் தின விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “கவலைப்படும் அளவுக்கு வொர்த் கிடையாது" என்று தனது விவாகரத்து குறித்து பேசினார். இதற்கு தவெக கட்சி நிர்வாகியான ரஞ்சனா நாச்சியார் விஜய்யின் பேச்சை காட்டமாக விமர்சித்து அவருக்கு அடுக்கடுக்காய் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக ரஞ்சனா நாச்சியார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “விஜய்யுடன் 25 வருடங்கள் வாழ்ந்து இரண்டு குழந்தைகளை பெற்ற மனைவிக்கே விஜய்யைப் பார்க்க அனுமதியில்லாத நிலை இருக்கிறது. நடுவில் ஒரு நபர் இருக்கிறார். அந்த நபர் யார் என்று தேவைப்பட்டால் சொல்வேன். விஜய்க்கு அப்படி என்ன கோபம்? எதற்கு உங்கள் முன் இத்தனை தடைகள்? யாரையும் சந்திக்கவிடாமல் தடுப்பது ஏன்? தாய் - தந்தை கூட விஜய்யைச் சந்திக்க முடியாமல் தடுத்து நிறுத்துகிறார்கள்..” என்று ரஞ்சனா நாச்சியார் என பல்வேறு புகார்களை அடுக்கியிருக்கிறார்.
விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள இந்த ரஞ்சனா நாச்சியார் யார்? 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'ஹீரோ', ரஜினியின் 'அண்ணாத்த', 'டைரி', 'நட்பே துணை' உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார் ரஞ்சனா நாச்சியார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவருக்கு தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பாலா சித்தப்பா. இயக்குநர் பாலாவின் அண்ணன் மகளான இவர் முதலில் டிவி சீரியலில் நடித்தார். பிறகுதான் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.
இவர் நடிகையாக அறிமுகமான திரைப்படம் 'துப்பறிவாளன்'. சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்ததோடு விஜய் டிவி புகழை வைத்து படம் தயாரித்ததாகவும் சொல்லப்படுகிறது. சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' மற்றும் விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமாவில் நடித்துக்கொண்டே வழக்கறிஞர் பணியையும் செய்து வந்த ரஞ்சனா நாச்சியார் பாஜகவில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கினார். மாநில செயலாளராக இருந்த நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தீவிரமாக தேர்தல் பிரச்சார வேலைகளை கவனித்து வந்தார்.
இந்த சூழலில் தான் பாஜகவில் தனக்கு மரியாதை கிடைக்கவில்லை எனக் கூறி அக்கட்சியில் இருந்து விலகியபின் தவெகவுக்கு ஆதரவாக விவாதங்களில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் விஜய் முன்னிலையில் அதிகாரபூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை கெருகம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் கும்பலாக படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை தடுத்து நிறுத்தி மிரட்டி, பேருந்தில் இருந்து இறங்கச்செய்து அவர்களை தாக்கியதோடு, அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதில் கைதாகி சிறை சென்று சர்ச்சையில் சிக்கிய ரஞ்சனா நாச்சியார் பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருதலை காதல் டார்ச்சர்... இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்...
திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண்ணை கத்தியால் குத்திய நபர்
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார், குற்றவாளி கைது
ஒருதலை காதலால் நடந்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
.png)






English (US) ·