எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு எதிரொலி பாதுகாப்பு வாகனங்களைக் குறைத்து பிரதமர் மோடி மழுப்பல்

39 minutes ago 16

புதுடில்லி, மே 14 மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிப்பதாலும், ஹோர் மூஸ் நீரிணைப்பு மூடப்பட்டதாலும் இந்தி யாவுக்கு கச்சா எண்ணெய், எல்பிஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்யாமல் அமெரிக்கா மற்றும் அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்ப ரேட் நண்பர்களுக்கு ஆதரவாக எரிபொருளைச் சேமிக்க பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்; வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும்; அன்னியச் செலா வணி இருப்பைப் பாதுகாக்க தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்; வெளிநாடு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என 7 கோரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி மே 11 அன்று வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடி சிக்கனம் பற்றிப் பேசினாலும், குஜராத், அசாமில் பாஜக வினர் பிரம்மாண்டமான வாகனப் பேரணிகளை நடத்து கின்றனர். மோடி கூட ஆடம்பரமாகத் தான் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார்; வெளிநாட்டுக்குக் கிளம்பிவிட்டார் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கலக்கமடைந்த பிரதமர் மோடி, தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை 50% குறைத்ததோடு, அனைவரும் மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து அமித் ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள், உத்தரப்பிர தேசம், டில்லி, குஜராத், மத்தியப் பிர தேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பாஜக மாநிலங்களின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் தங்களது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்ததாகக் கூறி, மோடியைப் போல சமூகவலைத்தளங்களில் விளம்பர ஷூட்டிங்கை தொடங்கியுள்ளனர்.

எனினும் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக பிரதமர் மோடியோ, ஒன்றிய அமைச்சர்களோ வாய் திறக்கவில்லை. பிரதமர் மோடி மே 15 முதல் 20ஆம் தேதி வரை அரபு மற்றும் அய்ரோப்பிய நாடுகளுக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி பாதுகாப்பு வாகனங்களை குறைக்க இதுதான் காரணமா?

பிரதமர் மோடி மே 10 அன்று தெலங்கானா மாநிலத்திற்கு சென்று, அய்தராபாத்தில் ரூ. 9,400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அய்தராபாத் விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற செகந்திராபாத்திற்கு செல்லும் போது 35 முதல் 40 வாகனங்களுடன் பிரம்மாண்ட அணி வகுப்புடன் சென்றார். இதுதொடர்பான காட்சிப் பதிவு பிரதமர் மோடி 7 கோரிக்கை அறிவித்தப் பின் சமூகவலைத் தளங்களில் மிக வேகமாக வைரலானது. காட்சிப் பதிவை பதிவிட்டு,”மோடியே இப்படி இருக்கிறார் ; நமக்கு மட்டும் அறிவுரை மழை பொழிகிறார்?” என அனைத்துத் தரப்பினரும் கடும் கண்டனத்துடன் கேள்வி எழுப்பினர். அதேபோல கார்ட்டூன்கள், மீம்ஸ்கள் டிரெண்டிங் அளவில் அனல் பறந்தன. இதற்குப் பின்பு தான் மோடி பாதுகாப்பு வாகனங்களை குறைத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆர்எஸ்எஸ் தலைவரின் வாகன எண்ணிக்கையும் குறைக்கப்படுமா?

நாட்டில் பதிவு செய்யப்படாத ஆர்எஸ்எஸ்-ஸின் (பாஜக வின் தாய் அமைப்பு) தலைவராக இருப்பவர் மோகன் பகவத். இவ ருக்கு ஜூன் 2015 முதல் ‘இசட் + விவிஅய்பி’ என்ற உயர் பாதுகாப்பு வளையம் உள்ளது. சிஅய்எஸ்எப் படையினரால் குண்டு துளைக்காத, அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தீயணைப்பு வாகனம் உட்பட 15 முதல் 30 வாக னங்கள் வரை அவருக்கு பாதுகாப்பாக செல்கின்றன. சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என எந்த அரசு பொறுப்பில் இல்லாதவருக்கு ஏன் இவ்வளவு பிரம்மாண்ட பாதுகாப்பு? என கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி கள் கேள்வி எழுப்பி வருகின்றன. ஆனால், மோடி அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், மேற்கு ஆசிய நெருக்கடி காரணமாக பாதுகாப்பு வாகன எண்ணிக்கையை பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், பாஜக முதலமைச்சர்கள் குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே போல ஆர்எஸ்எஸ் தலைவரின் வாகன எண்ணிக்கை குறைக்கப்படுமா? இல்லை, பதவி பறிபோகும் என்ற அச்சத்தில் மோடி அவருக்கு மட்டும் விலக்கு அளிப்பாரா? என நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Read Entire Article