Last Updated:May 11, 2026 10:10 PM IST
எஸ்.பி. வேலுமணி தரப்பிற்குப் போதிய பெரும்பான்மை ஆதரவு கிடைக்காத பட்சத்தில், அவர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமிக்கும் கொறடாவின் உத்தரவை மீறினால், அந்த 24 உறுப்பினர்களும் தங்கள் பதவியை இழக்க நேரிடும்

தமிழக சட்டமன்ற பேரவை முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தவெக விஜயின் புதிய ஆட்சி பொறுப்பேற்றுவிட்டது. நாளை, தவெக விஜய் சட்டமன்ற பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கவுள்ள நிலையில், அதற்குள் மீண்டும் 26 தொகுதிகளுக்கு மறுதேர்தல் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி இடையிலான அதிகாரப் போட்டியில், தற்போது எடப்பாடி பழனிசாமி தனது பிடியை வலுப்படுத்தியுள்ளார். முன்னதாக, தற்போதைய பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றத் தலைவராக நியமிக்க 17 சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிக சபாநாயகரைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை தற்போது 22-ஆக உயர்ந்துள்ளது.
மறுபுறம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோரது தலைமைக்கு 24 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி தரப்பை விட இவர்களிடம் கூடுதல் உறுப்பினர்கள் இருந்தாலும், சட்டரீதியான பாதுகாப்பைப் பெற இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை
கட்சி தாவல் தடை சட்டத்தின் படி, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்கள் பிரிந்து சென்றால் மட்டுமே அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியாது. தற்போதைய நிலையில், அதிமுக உறுப்பினர்களில் 2/3 பங்கைப் பெற எஸ்.பி. வேலுமணி தரப்பிற்கு 32 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும். அப்படியிருந்தால் மட்டுமே, அவர்களால் புதிய சட்டமன்றக் கட்சித் தலைவரையும், புதிய கொறடாவையும் நியமிக்கச் சபாநாயகரிடம் கோரிக்கை வைக்க முடியும்
எஸ்.பி. வேலுமணி தரப்பிற்குப் போதிய பெரும்பான்மை ஆதரவு கிடைக்காத பட்சத்தில், அவர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமிக்கும் கொறடாவின் உத்தரவை மீறினால், அந்த 24 உறுப்பினர்களும் தங்கள் பதவியை இழக்க நேரிடும். இருப்பினும், தற்காலிக சபாநாயகரிடம் அளித்த மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. இதன் மூலம் பல தொகுதிகளுக்கு மறுதேர்தல் வருவதற்கான வாய்ப்பையும் தவிர்க்க முடியும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய், தனது திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே, அடுத்த 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
திருப்பத்தூர் தொகுதியில் வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான தேர்தல் வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மறுதேர்தலுக்கு வாய்ப்பு இல்லையென்றாலும், மாறுவாக்குப்பதிவு கூட நடத்தப்படலம். தேர்தல் முடிவுகளும் தலைகீழாக மாறலாம். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்டையில் முடிவாகும்.

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!
5 வயதுக்குட்பட்டோருக்கு குடும்பத் தலைவர் மூலம் பதிவு கட்டாயம்.
நேபாளம், பூட்டான் மக்களுக்கு வழங்கும் ஆதார் 10 ஆண்டுகள் மட்டுமே செல்லும்.
போலி ஆவணங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை.
.png)







English (US) ·