டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், எங்கள் தி.மு.க.வும் இருக்கும் வரை, பா.ஜ.க.வால் தமிழ்நாட்டை ஆள முடியவே முடியாது! நீங்கள் அந்தர் பல்டி அடித்தாலும், என்ன முகமூடி போட்டுக் கொண்டு வந்தாலும், புதிது புதிதாக யாரை அழைத்துக் கொண்டு வந்தாலும், எத்தனை ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டிப் பார்த்தாலும், தமிழ்நாடு எப்போதுமே உங்களுக்கு OUT OF CONTROL–தான்! தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் பாச்சா பலிக்காது!, சிறுகனூரில் நடைபெற்ற, திமுக நிர்வாகிகள் சந்திப்பு மாபெரும் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்ஜனை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ”ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலை, பொருளாதார பேரழிவு போன்றவை மக்கள் பிரச்சனைகள். இது குறித்து விவாதிக்க கோருகி றோம். நரேந்திர மோடி மிரட்டப்பட்டாரா., சமரசம் செய்யப்பட்டாரா என்று கேள்விகள் எழும். அதனால் தான் அவர் நாடாளுமன்றத்தை விட்டு ஓடிவிட்டார்” ராகுல் காந்தி பேட்டி.
* 10ஆவது நாளாக போர் தொடரும் நிலையில் ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா நியமனம்: ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து; டிரம்ப் கடும் எதிர்ப்பு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சட்டீஸ்கரில் 5 ஏக்கரில் ‘ஓபியம் பயிரிட்டதாக’ பாஜக தலைவர் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவையின் மய்யத்தில் போராட்டம் நடத்தியதால், காங்கிரசைச் சேர்ந்த 29 பேர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்கம் பின்னர் ரத்து செய்யப்பட்டது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க அறிவிப்பை முன்வைக்க இந்தியா கூட்டணி கட்சிகள் எம்.பி.க்களின் கையொப்பங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளன
தி இந்து:
* பெண்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம்: அரசியல மைப்பு (நூற்று ஆறாவது திருத்தம்) சட்டம் அல்லது நாரி சக்தி வந்தன் ஆதினியம் செயல் படுத்துவதற்கான காலக்கெடுவை முன்கூட்டியே செயல்படுத்துவதற்கான திருத்தத்தை கொண்டு வருவது குறித்து மோடி அரசு பல எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்தைக் கோரியுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
– குடந்தை கருணா
.png)
1 hour ago
20






English (US) ·