கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 22.7.2026

1 hour ago 6

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* கரூர் நெரிசலில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு வேலை இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தற்காலிக பணிதான் வழங்க வேண்டும். பணி நியமனம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலாளர் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

* மாணவர்கள் மீது காவல்துறையின் தடியடியை கண்டித்து பிரதமர் மோடி இல்லம் முற்றுகை; ராகுல், பிரியங்கா, டி.கே.சிவக்குமார், அகிலேஷ் உள்ளிட்டோர் கைது: டில்லியில் உச்சக்கட்ட பரபரப்பு.

* நீட் வினாத்தாள் கசிவு, கரப்பான் பூச்சி கட்சிப் போராட்டம், அயோத்தி ராமன் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 2ஆவது நாளாக நேற்றும் முடங்கின.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் செய்யும் வரையில் போராட்டத்தை கண்டிப்பாக விரிவுப்படுத்துவோம்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சபதம். மீண்டும் ஜந்தர் மந்தர் சாலையில் கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மத்தியப் பிரதேச சட்டப்பேரவை ஒருங்கிணைந்த குடிமைச் சட்ட (UCC) மசோதாவை நிறைவேற்றியது; ‘ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல்’ என காங்கிரஸ் கடும் விமர்சனம்.

தி இந்து:

* செயற்பாட்டாளரைத் தடுத்த உத்தரகாண்ட் அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம். டில்லி போராட்டத்தில் பங்கேற்க சென்ற உத்தரகாண்ட் பரிவர்த்தன் கட்சித் தலைவர் பிரபாத் தியானியை காவல்துறை தடுத்து நிறுத்தியதை “ரவுடித்தனம்” எனக் குறிப்பிட்ட உயர்நீதிமன்றம், மாநில அரசை கடுமையாக விமர்சித்தது.

தி டெலிகிராப்:

* இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: ஷம்பு எல்லையில் பஞ்சாப் விவசாயிகள் தடுக்கப்பட்டனர். முன்மொழியப்பட்ட இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விவசாயம், பால் உற்பத்தி மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனக் கூறி டில்லி நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகளை அரியானா காவல்துறை ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தியது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* “கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் கடிதம் எழுதுவது எப்படி என்று தெரியாமல் இருக்கலாம். ஆர்எஸ்எஸ் உங்களுக்கு கற்பிப்பது கருணை மனுக்கள் எழுதுவதை மட்டுமே,” என்று மகுவா மொய்த்ரா எக்ஸ் தளத்தில் விமர்சனம்.

* “கைதுகள் மூலம் தனது மோசமான ஆட்சியை மறைக்கலாம் என்று இந்த அரசு நினைத்தால், அந்த அகந்தைக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்,” என்று மேனாள் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்.

குடந்தை கருணா

Read Entire Article