கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்..? வெளியான ஹேப்பி நியூஸ்!

1 hour ago 16

Last Updated:Feb 16, 2026 8:57 PM IST

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மே மாதத்தில் திறக்கப்பட உள்ளது; பேருந்து நிலையம், ஆகாய நடைமேடை, போக்குவரத்து நெரிசல் குறைப்பு முக்கிய அம்சங்கள்.

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்?
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும்?

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்படும் ரயில் நிலையம் மே மாதத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம், கடந்த 2024-ஆம் ஆண்டு இறுதியில் திறக்கப்பட்டு, அங்கிருந்து தொலைதூர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சாலை மார்க்கமாக செல்ல குறைந்தது ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் நேரம் செலவிட வேண்டி உள்ளது.

இதனால், பல்வேறு தரப்பினரும் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் வண்டலூர், ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிதாக ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் நின்று செல்லும் வகையில் மூன்று நடைமேடைகளுடன் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் உருவாகி உள்ள நிலையில், ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு செல்லும் வகையில் ஆகாய நடைமேடை கட்டுமான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

எனவே விரைவில் இந்த பணிகள் நிறைவு பெறும் நிலையில், மே மாதத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article