குழந்தையாக என்ட்ரி... தமிழில் விஜய்யுடன் அறிமுகம்... 13 ஆண்டுகளாக படங்கள் இல்லை - இவர் யார் தெரிகிறதா?

21 hours ago 17

Last Updated:Feb 07, 2026 3:20 PM IST

சினிமாவில் குழந்தையாக இருந்தபோது நடிக்க வந்த இந்த தமிழ் பட நடிகை, விஜய்யின் படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்போது 13 ஆண்டுகளாக படங்கள் இல்லை. அவர் யார் தெரியுமா?

 மலையாள படங்களில் சகோதரி வேடங்களில் நடித்த நடிகை கிருஷ்ணா. திருமணத்திற்குப் பிறகு திரையுலகிலிருந்து விலகி இருக்கும் சில கதாநாயகிகள் உள்ளனர். அவர்களில் கிருஷ்ணாவும் ஒருவர். தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். இவரது உண்மையான பெயரான கிருஷ்ணா என்று கூறினால் தமிழ் ரசிகர்களுக்குத் தெரியாது.

 ஆனால் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இவரை உங்களுக்கு நியாபகப்படுத்தும். 2005-ஆம் ஆண்டு வெளியான 'சிவகாசி' திரைப்படம் நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய மைல்கல். பேரரசு இயக்கத்தில் வெளியான இந்தப் படம், கமர்ஷியல் மசாலா படங்களுக்கான ஒரு இலக்கணமாகவே அமைந்தது. அண்ணன் செய்த தப்பை தம்பி திருத்துவது, அதே சமயம் தங்கை மீது காட்டும் எல்லையற்ற பாசம்" - இதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன்.

 இந்தப் படத்தில் விஜய்யின் பாசமான தங்கையாகவும், அதே சமயம் அண்ணன் என்று தெரியாமலேயே அவரிடம் சண்டையிடும் துறுதுறுப்பான பெண்ணாகவும் மிகச் சிறப்பாக 'வைரமணி' கேரக்டரில் குறிப்பாக, அண்ணன்-தங்கை சென்டிமென்ட் காட்சிகளில் நடித்து தமிழக மக்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர் லக்‌ஷணா.

 ஆம், சிவகாசி படத்தில் விஜயின் பாச தங்கையாக நடித்த லக்‌ஷணாவின் நிஜப் பெயர் தான் கிருஷ்ணா. சினிமாவுக்காக இவர் பெயர் லக்‌ஷணா ஆக மாறியது. இவர் 2002-ஆம் ஆண்டு 'கையெத்தும் தூரத்து' (Kaiyethum Doorath) என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.

 இந்தப் படத்தின் ஹீரோ பகத் பாசில். ஆம், பகத் பாசில் அறிமுகமான படத்தில் தான் லக்‌ஷணாவும் அறிமுகம். 'சிவகாசி' படத்தின் வெற்றிக்குப் பிறகு, 2007-ல் நடிகர் பரத் நடித்த 'திருமகன்', விக்னேஷ் நடித்த 'ஈசா' திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

 மலையாளத்தில் 'பாலேட்டன்' என்கிற படத்தில் மோகன்லாலின் சகோதரியாகவும், 'பருந்த்' என்கிற படத்தில் மம்முட்டியின் காதலியாக நடித்த லக்‌ஷணா, தமிழ் மற்றும் மலையாளம் தவிர 'ஏக் போலீஸ்' போன்ற சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

 முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. இந்த நிலையில் சில படங்களில் நடித்த பிறகு 2010ல் சஜித் பிள்ளை என்பவரை திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் பயணிக்கத் தொடங்கினார். லக்‌ஷணாவின் கணவர் சஜித் பிள்ளை கத்தாரில் மருத்துவராக உள்ளார்.

 திருமணத்திற்குப் பிறகு தனது கணவருடன் கத்தாரில் குடியேறிய நடிகை லக்‌ஷணாவுக்கு கடந்த 13 வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லை. இதனால் கத்தாரிலேயே நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் அவர். சிறு வயதில் இருந்தே நடனத்தை முறைப்படி கற்ற லக்‌ஷணா, அதனை தற்போது தனது தொழிலாக மாற்றியிருக்கிறார். தற்போது இவர் திரையுலகில் பெரிய அளவில் ஆக்டிவாக இல்லை என்றாலும், 'சிவகாசி' படத்தின் மூலம் இன்றும் ரசிகர்களால் அண்ணன்-தங்கை சென்டிமென்ட்டிற்காக நினைவுகூரப்படுகிறார். இப்போது தனது ரீ என்ட்ரிக்கு தயார் எனவும் அறிவித்துள்ளார்.

Gen-Z vs Millennials... யாருக்கு IQ அதிகம்... அதிக புத்திசாலி யார் தெரியுமா?

Gen-Z vs Millennials.. யாருக்கு IQ அதிகம் தெரியுமா?

  • Gen Z தலைமுறையினர் Millennial-களை விட அதிக IQ கொண்டவர்களா?

  • புதிய தலைமுறை IQ அதிகரிக்கும் என்றாலும் சமீபத்திய தரவுகள் மாற்றம் காட்டுகின்றன.

  • Gen Z தலைமுறை அதிக டிஜிட்டல் பயன்பாடு IQ குறைவுக்கு காரணம் என ஆய்வில் தகவல்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article