கோப்புப் படம் - படம்: பிக்சாபே
Temple roof collapsed, three girls died; many injured.
In Morena district, Madhya Pradesh, a heavy stone slab from a Mata temple roof collapsed on Monday, February 9, during a prasad distribution event. Three girls died, and many others, including a couple distributing prasad, were injured. The incident occurred while construction work was underway on the temple roof, causing the slab to break. Villagers helped transport the injured to an infirmary. Police and administrative officials have initiated an investigation into the accident.
Generated by AI
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் மொரேனா மாவட்டத்தில், பிரசாதம் வழங்கும் நிகழ்வின்போது, கோயில் கூரையில் பதிக்கப்பட்டிருந்த கனமான கற்பலகை திடீரென்று இடிந்து விழுந்தது.
இதில் மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் அங்குள்ள மாதா கோயில் வளாகத்திற்குள் திங்கட்கிழமை (பிப்ரவரி 9) நிகழ்ந்தது.
அந்தச் சமயத்தில், அங்கிருந்த பல சிறுமிகளும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் பிரசாதம் வழங்குவதற்காகக் கோயிலுக்கு வந்திருந்தபோது, சிறுமிகள்மீது கூரையின் கற்பலகை இடிந்து விழுந்தது.
கிராம மக்களின் உதவியுடன் காயமடைந்த தம்பதியரும், மற்ற சிறுவர்களும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறையினரும் நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்தில் விசாரணையைத் தொடங்கினர்.
“பிரசாதம் வழங்கியபோது கோயில் கூரை இடிந்து விழுந்ததில் மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர். கோயில் கூரையில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, கற்பலகை உடைந்து விபத்து ஏற்பட்டது,” என்று அதே பகுதியில் வசித்து வரும் லாலு சர்மா தெரிவித்தார்.
.png)







English (US) ·