சிங்கப்பூர் கடைத்தொகுதிகளில் அதிகரிக்கும் கார் விற்பனை நிலையங்கள்

1 hour ago 12

662956e4-eb31-4d1f-9015-ebf8474e9c94

வரும் மாதங்களில் ‘பிடோக் மால்’ கடைத்தொகுதியில் தனது விற்பனை நிலையத்தை டெஸ்லா திறக்க உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Increasing car dealerships in shopping complexes

Singapore's automotive industry competition is driving car dealers to open showrooms in shopping malls, shifting from traditional sales districts. Nine of 13 new showrooms in the last 18 months are in malls, with at least one more planned for a Bedok mall. This strategy aims to attract casual mall visitors and diners to boost sales. Competitors are actively pursuing new showrooms in malls and commercial buildings. Tesla, last year's best-selling car, plans its third direct mall showroom in Bedok, expanding on its Millenia Walk and Westgate locations.

Generated by AI

சிங்கப்பூரில் வாகனத் துறை அதிக போட்டியைச் சந்தித்து வருவதால் கார் விற்பனையாளர்கள் கடைத்தொகுதிகளில் கார் விற்பனை நிலையங்களைத் திறந்து வருகின்றனர்.

கடந்த 18 மாதங்களில் திறக்கப்பட்ட 13 கார் விற்பனை நிலையங்களில் ஒன்பது நிலையங்கள் கடைத்தொகுதிகளில் திறக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, இவ்வாண்டின் பிற்பகுதியில் பிடோக்கில் குறைந்தபட்சம் ஒரு கடைத்தொகுதியில் கார் விற்பனை நிலையம் உதயமாக உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வழக்கமாக லெங் கீ, உபி, அலெக்சாண்ட்ரா போன்ற பிரபல கார் விற்பனை வட்டாரங்களில் உள்ள கார் விற்பனையகங்களுக்கு வாடிக்கையாளர்கள் நேரில் வருவதை மட்டுமே கார் விற்பனையாளர்கள் இனி நம்பியிருக்கப் போவதில்லை என்பதை புதிய நிலவரம் உணர்த்துகிறது.

அதற்குப் பதில், கடைத்தொகுதிகளில் தங்கள் விற்பனை நிலையங்களை அமைத்து, காரை வாங்கும் எண்ணம் ஏதுமின்றி அங்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் உணவருந்த வருபவர்களை ஈர்க்க கார் விற்பனையாளர்கள் முயன்று வருகின்றனர். அதன் மூலம் வாகன விற்பனை அதிகரிக்கும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

மேலும், அதிகமான கார் விற்பனை நிலையங்களைத் திறக்க வேண்டும் என்ற உந்துதல் வாகனத் துறை போட்டியாளர்களிடம் காணப்படுகிறது. கடைத்தொகுதியாக இருந்தாலும் வர்த்தகக் கட்டடங்களாக இருந்தாலும் அங்கு புதிய கார் விற்பனை நிலையங்களைத் திறக்க அவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் அதிகம் விற்பனையான கார்களில் டெஸ்லா முதலிடத்தில் உள்ளது. இனி வரும் மாதங்களில் ‘பிடோக் மால்’ கடைத்தொகுதியில் அது தனது விற்பனையகத்தைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூரின் கடைத்தொகுதியில் அமெரிக்க மின்சார வாகன நிறுவனம் ஒன்றின் நேரடி விற்பனையகம் திறக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

ஏற்கெனவே மில்லேனியா வாக், வெஸ்ட் கேட் ஆகிய பகுதிகளில் அவற்றை டெஸ்லா திறந்துள்ளது.

Read Entire Article