Last Updated:May 16, 2026 5:32 PM IST
குதிரையின் மாதிரிகளை சேகரித்து மத்திய அரசின் குதிரைகளுக்கான தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அந்த குதிரை கிளாண்டர்ஸ் நோய் தொற்றால் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் பொதுமக்கள் சவாரிக்காக பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று ’கிளாண்டர்ஸ்’ (Glanders) எனப்படும் ஆபத்தான தொற்று நோயால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் சிலர் குதிரை சாவரி தொழில் செய்து வருகின்றனர். குதிரைகள் மீது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏறி சவாரி செல்வது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஒரு குதிரையை அதன் உரிமையாளர் பெசன்ட் மெமோரியல் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அது சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தது. அந்த குதிரையின் மாதிரிகளை சேகரித்து மத்திய அரசின் குதிரைகளுக்கான தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அந்த குதிரை கிளாண்டர்ஸ் நோய் தொற்றால் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
மனிதர்களுக்கும் இந்த நோய் தொற்று பரவும் ஆபத்துள்ளதால், சென்னையில் உள்ள 140 க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு ’கிளாண்டர்ஸ்’ நோய் தொற்று பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குதிரைகள் பராமரிக்கப்பட்டு வரும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கவும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Location :
Chennai,Tamil Nadu
.png)





English (US) ·