தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு? – வெளியான தகவல்

1 hour ago 9

Last Updated:May 11, 2026 9:58 PM IST

“போதைப் பொருள் கலாச்சாரத்தை கட்டுக்குள்வைக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ எடுப்பேன்” என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வென்று தனி பெரும் கட்சியாக இருந்தாலும், ஆட்சி அமைக்க தேவையான 118-ஐ அக்கட்சியால் நெருங்கமுடியவில்லை. இதனால், அக்கட்சி ஆட்சி அமைக்கவும் முடியாமல், அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கவும் முடியாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளின் தயவை நாடியது தவெக.

 அதன்படி, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரியது தவெக. இதனை ஏற்ற காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைத்தது. இதேபோல், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் தங்கள் ஆதரவை நிபந்தனையின்றி, வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தன.

 இதன் காரணமாக நேற்று (10ஆம் தேதி) தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்று தமிழ்நாட்டில் புதிய அரசை அமைத்தார். பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும் நேரு உள்விளையாட்டு அரங்கிலே, முதலமைச்சராக தனது முதல் பேச்சை பேசிய முதலமைச்சர் விஜய், “பெண்கள் பாதுகாப்பை மிகவும் கடுமையாக வைத்திருப்பேன். போதைப் பொருள் கலாச்சாரத்தை கட்டுக்குள்வைக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதனை இன்று (10ஆம் தேதி) முதலே எடுப்பேன். சட்டம் ஒழுங்கில் அனைவருக்குமான பாதுகாப்பை நான் உறுதி செய்வேன்” என பேசினார்.

 இதனைத் தொடர்ந்து தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் விஜய், தனது அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார். மேலும் நேற்று மாலையே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அந்த ஆய்வுக் கூட்டத்தில், பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 இந்நிலையில், வழிபாட்டு தளங்கள், கல்வி கூடங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் எல்லைக்குள் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகளை ஆய்வு செய்து உடனடியாக மூட தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் அதிகாரிகள் இந்த கடைகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் மூலம், 200 முதல் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் வரை மூடப்படலாம் என சொல்லப்படுகிறது.

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. மத்திய அரசின் புதிய ரூல்ஸ் என்ன தெரியுமா?

Aadhaar | ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!

  • 5 வயதுக்குட்பட்டோருக்கு குடும்பத் தலைவர் மூலம் பதிவு கட்டாயம்.

  • நேபாளம், பூட்டான் மக்களுக்கு வழங்கும் ஆதார் 10 ஆண்டுகள் மட்டுமே செல்லும்.

  • போலி ஆவணங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article