சென்னை, மே 14 – 3 நாளில் 3 பிரச்சினை களால் த.வெ.க.வை தி.மு.க. கூட்டணி கட்சிகள் வாட்டி எடுத்தன. விஜய், முதலமைச்ச ராக பொறுப்பேற்று மூன்று நாட்கள் முடிந்து இருக்கிறது. ஆனால் இந்த மூன்று நாட்களில் அந்த கட்சியின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கடும் எதிர்ப்பு குரல் கொடுத்து இருக்கின்றன.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாம் இடம்!
அதில் முதல் பிரச்சினை பதவி யேற்பு நாளின்போது தமிழ்த்தாய் வாழ்த்து 3 ஆம் இடத்தில் பாடப்பட்டு விட்டது. இது தமிழுக்கு ஏற்பட்ட இழுக்கு என்று தி.மு.க., முதல் குரல் கொடுத்தது. அதோடு அந்த பிரச்சினை நிற்காமல் த.வெ.க.வுக்கு ஆதரவு தந்த கம்யூனிஸ்டு மற்றும் வி.சி.க. தரப்பும் கடும் எதிர்ப்பு குரல் கிளப்பினர். ஆனால் அன்று மாலை தற்காலிக பேரவைத் தலைவர் பதவியேற்கும் நிகழ்வி லும் தமிழ்த் தாய் வாழ்த்து 3 ஆவதாக பாடப்பட்டது. அத னால் கோபத்தின் உச்சிக்கு சென்ற த.வெ.க. ஆதரவு கட்சிகள் மீண்டும் தங்களது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்தனர். ஆனால் அதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முறைப்படி யான அரசின் தகவலாக அல்லாமல் தனது ‘எக்ஸ்’ பதிவில் இதுபோன்ற நிலை இனி இல்லாமல் பார்த்து கொள்கி றோம் என்று பொத்தாம் பொதுவாக பதிவு செய்து இருந்தார்.
கல்வி அமைச்சர்
அடுத்த பிரச்சினையாக விஜய் அமைச்சரவையில் வெங்கட்ர மணனுக்கு பதவி வழங்கியது. மேலும் அவருக்கு கல்வித்துறை வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் பரவியது. அதாவது, தந்தை பெரியாரின் கொள்கைக்கு எதிரான பார்ப்பனரான அவருக்கு அமைச்சர் பதவி வழங்கியதோடு மட்டுமல்லாமல் கல்வி பொறுப்பை வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வி.சி.க.வினர் பலரும் தங்களது எதிர்ப்பு கருத்து களை சமூக வலை தளத்தில் பதிவிட்டனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் தேர்தலுக்கு முன்பு வெங்கட்ரமணனுக்கு எதி ராக அவரது மனைவி பேசிய புகார் காட்சிப் பதிவை சமூக வலை தளத்தில் பரவவிட்டனர்.
ஜோதிடர் அரசியல் ஆலோசகரா?
மூன்றாவது பிரச்சினை, முத லமைச்சரின் அரசியல் பிரிவு ஆலோச கராக ரிக்கி ரதன் பண்டிட் வெற்றி வேல் நியமனம் செய்யப்பட்டது. அதாவது ஒரு ஜோதிடர் எப்படி அரசியல் ஆலோசனைகள் வழங்கு வார் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதனை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் வலியுறுத்தினர்.
வி.சி.க.வின் சட்டமன்ற உறுப்பி னர் வன்னியரசு வெளியிட்டுள்ள பதிவில், ஆஸ்தான ஜோதிடர்கள் என்பவர்கள் மன்னர்களின் அரசவை யில் ஆலோசனை கூறும் ராஜ குருக்களாக வலம்வந்தவர்கள். ஆனால் இன்று மன்னர்களும் இல்லை, மன்னராட்சியும் இல்லை. அவர்களை ஆட்டிப்படைத்த வேத குப்பைகளும் இல்லை. அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்புச் சட்டத்தின் துணையோடு மக்க ளாட்சி நடைபெறுகிறது.
இன்றைய காலகட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தலைமை யேற்று நடத்தும் முதலமைச்சருக்கு ஆலோசனை கூறும் அரசுப்பதவியில், ‘ஹார்ட் அட்டாக் வந்தால் பதற்றப்படாதீர்கள், மந்திரம் சொல்லுங்கள்’ ‘தலைவிதி இருந்தால் தான் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும்’ என்று அறிவுரை சொல்லும் நபரை நியமிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறை யில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை விரிவாக ஆராய்ந்து தமிழ்நாட்டிலும் அத்தகைய சட்டத்தை கொண்டு வருவது தான் மதச் சார்பற்ற அரசின் பணி யாக இருக்கவேண்டும். இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று வற்புறுத்தினர்.
.png)
40 minutes ago
13







English (US) ·