திருமணத்திற்காக பணம் மட்டுமல்ல.. நகையை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு..! விண்ணப்பிப்பது எப்படி.?

21 hours ago 18

ஈ.வே.ரா. மணியம்மையார் திட்டம்:

மணப்பெண்ணின் தாய் விதவையாக இருக்க வேண்டும். விதவை உதவித்தொகை பெறுபவர்களுக்கு விதவை மற்றும் வருமானச் சான்று தேவையில்லை.

அன்னை தெரசா திட்டம்:

மணப்பெண் ஆதரவற்றவராக இருக்க வேண்டும் இதற்கு கண்டிப்பாக பெற்றோர் இறப்பு சான்று அல்லது ஆதரவற்றோர் சான்று தேவையாகும்.

டாக்டர் தர்மாம்பாள் திட்டம்:

மணப்பெண் விதவையாக இருக்க வேண்டும்; விதவைச் சான்று தேவை.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டம்:

கலப்பு திருமணத்திற்கு சாதிச் சான்று தேவை.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு:

பொதுவாக, திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். விதிவிலக்கு சூழ்நிலைகளில் திருமணத்திற்கு முதல் நாள் வரை ஏற்கப்படலாம்.

விதவை மறுமணத்திற்கு: திருமணம் முடிந்த 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கலப்பு திருமணத்திற்கு: திருமணம் முடிந்து 2 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

திருமண அழைப்பிதழ்.

மணமகள் மற்றும் மணமகனின் ஆதார் அட்டை.

குடும்ப அட்டை.

வருமானச் சான்று

விதவைச் சான்று (ஈ.வே.ரா. மணியம்மையார்/தர்மாம்பாள் திட்டங்களுக்கு).

ஆதரவற்றோர் சான்று அல்லது பெற்றோர் இறப்புச் சான்று (அன்னை தெரசா திட்டத்திற்கு).

கல்விச் சான்றிதழ்கள் (பள்ளி/கல்லூரி மாற்றுச் சான்று, மதிப்பெண் பட்டியல், பட்டம்/பட்டயச் சான்று).

வங்கிக் கணக்கு விவரங்கள்.

திருமண பதிவு சான்று (திருமணத்திற்கு பிறகு சமர்ப்பிக்க வேண்டும்).

மணமகள் மற்றும் மணமகனின் புகைப்படம்.

விண்ணப்பிக்கும் இடம்:

ஆன்லைனில்:

இ-சேவை மையங்கள் மூலம் https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html இல் விண்ணப்பிக்கலாம்.

நேரடியாக:

மாநகராட்சி ஆணையர், நகராட்சி ஆணையர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் அல்லது மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

Read Entire Article