நகைச்சுவை நடிகர் செந்திலின் மகன் காதலுக்காக டாக்டர் ஆன கதை தெரியுமா?

6 hours ago 2

நகைச்சுவை நடிகர் செந்தில் சினிமாவில் கோலோச்சினாலும், அவரது மகன் மணிகண்ட பிரபு சினிமா பக்கம் தலைகாட்டாமல் டாக்டராகி ஏழை எளியோருக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார்.

2 Min read

Published : Oct 15 2025, 10:21 AM IST

14

Actor Senthil Son Manikanda Prabhu Love Story

Image Credit : instagram

Actor Senthil Son Manikanda Prabhu Love Story

1980களில் இருந்து 1990களின் இறுதிவரை தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக கொடிகட்டி பறந்தவர் செந்தில். அந்த காலகட்டத்தில் ஹீரோவிடம் கால்ஷீட் வாங்கும் முன்பே செந்திலிடம் கால்ஷீட் வாங்க வேண்டும். அந்த அளவுக்கு பிசியான நடிகராக வலம்வந்தார் செந்தில். ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 20 முதல் 25 படங்களில் நடிக்கும் அளவுக்கு செம டிமாண்ட் உள்ள நடிகராக இருந்து வந்தார் செந்தில். செந்திலோடு, கவுண்டமணியும் சேர்ந்தால் அந்தப் படம் கன்பார்ம் ஹிட் என சொல்லும் அளவுக்கு இருவரும் ஒரு காமெடி ஜோடியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தனர்.

24

காமெடி கிங் செந்தில்

Image Credit : instagram

காமெடி கிங் செந்தில்

கவுண்டமணி - செந்தில் கூட்டணியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வந்துள்ளன. படத்தில் இருவரும் எலியும் பூனையுமாக காட்டப்பட்டாலும் நிஜத்தில் நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வந்தனர். கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியாகி 36 ஆண்டுகள் ஆனாலும் அதில் செந்தில் - கவுண்டமணி நடித்த வாழப்பழ காமெடிக்கு நிகர் ஏதுமில்லை. காலம் கடந்து அவர்களின் காமெடி காட்சிகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. தற்போது சினிமாவில் பெரியளவில் நடிக்காவிட்டாலும் அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்து வருகிறார் செந்தில்.

34

செந்தில் மகன் மணிகண்ட பிரபு

Image Credit : instagram

செந்தில் மகன் மணிகண்ட பிரபு

நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு இரு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகனான மணிகண்ட பிரபு, மருத்துவராக பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார். நடிகர் செந்திலின் குடும்பத்தில் யாருமே படித்தவர்கள் இல்லையாம். அவருடைய பேமிலியில் முதன்முறையாக டாக்டருக்கு படித்தது செந்திலின் மகன் மணிகண்ட பிரபு தானாம். செந்தில் மகன் டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கும்போதே தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால் அதன்பின்னர் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.

44

மணிகண்ட பிரபுவின் லவ் ஸ்டோரி

Image Credit : instagram

மணிகண்ட பிரபுவின் லவ் ஸ்டோரி

அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. மணிகண்ட பிரபு, ஜனனி என்கிற பல் மருத்துவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இரண்டு வீட்டிலும் பெரியளவில் எதிர்ப்பு இல்லை. ஆனா மணிகண்ட பிரபு நடிக்க கிளம்பியதும் ஜனனிக்கு பயம் வந்திருக்கிறது. ஏனெனில் ஜனனியின் தந்தை தன் மகளை டாக்டருக்கு தான் திருமணம் செய்துகொடுக்கணும்னு நினைச்சிட்டு இருந்தாராம். அதனால் தன் காதலுக்காக நடிப்பை தூக்கியெறிந்துவிட்டு டாக்டராகிவிட்டாராம் மணிகண்ட பிரபு.

Read Entire Article