பெங்களூரு, மே 14 கருநாடக மாநிலத்தில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி அளிப்பதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஹிஜாப் அணிந்து செல்லத் தடை
கருநாடகாவில் பள்ளி, கல்லூரி களில் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் அதனை நீக்கி முதலமைச்சர் சித்தராமையாக உத்தரவிட்டுள்ளார்.
கருநாடக மாநிலத்தில் தற்போது சித்தராமையா முதலமைச்சராக உள்ளார். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முன்னதாக கடந்த ஆட்சியில் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடந்தது. அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு கருநாடகத்தில் அரசு பள்ளிகளில் மத அடையாளங்களை முன்னிலைப்படுத்தும் ஆடைகளை அணியத் தடை விதிக்கப்பட்டது.
பள்ளிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டதால் ஆங் காங்கே போராட்டங்களும் நடந்தன. இதனையடுத்து நடந்த தேர் தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சித் தேர்தல் வாக்குறுதியிலேயே பள்ளிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என கூறியிருந்தார். இதற்கு பதவியேற்றதும் நடவடிக்கை எடுக்கபட்ட நிலையில் தற்போது கருநாடக மாநில பள்ளிக்கல்வித் துறை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
மத அல்லது பாரம்பரியச் சின்னங்களை அணியவோ அகற்றவோ மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். கல்வி நிலையங்கள், “அறிவியல் மனப்பான்மை, பகுத் தறிவு, சமத்துவம், கண்ணியம், சகோதரத்துவம், ஒழுக்கம், பரஸ்பர மரியாதை, சமூக நல்லிணக்கம், அரசியலமைப்புச் சட்ட ஜனநாயகப் பொறுப்புகளை” மேம்படுத்த வேண்டும். “அரசியலமைப்புச் சட்ட ரீதியான மதச்சார்பின்மை என்பது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு எதிரானது அல்ல; மாறாக, இது அனைவருக்கும் சமமான மரியாதை யையும், நிறுவன நடுநிலைமையையும், பாரபட்சமற்ற நடத்தையையும் உறுதி செய்வதாகும்” என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறியதாவது:- “கருநாடகத்தில் அரசுப் பள்ளிகளில் முந்தைய பாஜக அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு மத அடையாளங்களை முன்னிலைப் படுத்தும் ஆடைகளை அணியத் தடை விதித்தது. இதற்கு கருநாடகாவில் உள்ள பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பெரும் போராட்டம் வெடித்தது. நாங்கள் இதுகுறித்து ஒரு முடிவை எடுத்துள்ளோம்.
அதன்படி 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அதாவது பி.யூ.சி. வரை மாணவ-மாணவிகள் தங்களின் மத அடையாளங்களை முன்னிலைப்படுத்தும் அதாவது ஹிஜாப், பூணூல், கைகளில் கட்டப் படும் புனித கயிறு, ருத்ராட்சை மாலை, தலைப்பாகை உள்ளிட்டவற்றை அணியலாம். முஸ்லிம் சமூக மாண விகள் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. நடப்பு ஆண்டு முதல் இந்த உத்தர வானது அமலுக்கு வருகிறது.
.png)
41 minutes ago
10







English (US) ·