புருஷனுடன் சண்டை; துள்ளிக் குதித்து மாமனார் வீட்டிற்கு வந்த மீனா; குடும்பமே செம ஹேப்பி; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

3 hours ago 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தன்னுடைய வீட்டிலிருந்து மாமனார் மற்றும் மாமியார் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ளார். ஏன் வந்தார் என்ன காரணம் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

17

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Image Credit :

JioHotstar

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில் சரக்கு அடிச்சிட்டு வந்த செந்திலிடம் மீனா கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. தனக்கு தூக்கும் வருகிறது, நீ கேட்ட எல்லா கேள்விகளுக்கும் காலையில் பதிலளிப்பதாக கூறிவிட்டு செந்தில் தூங்கிவிட்டார். இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 611ஆவது எபிசோடில் செந்தில் மற்றும் மீனா இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

27

பால் இல்ல. அடுப்பு, பாத்திரம் என்று எதுவும் இல்லை

Image Credit :

JioHotstar

பால் இல்ல. அடுப்பு, பாத்திரம் என்று எதுவும் இல்லை

காலையில் தூங்கி எழுந்ததும் காபி, கேட்ட செந்திலுக்கு மீனா தரமான பதிலடி கொடுத்தார். அதாவது, பால் இல்ல. அடுப்பு, பாத்திரம் என்று எதுவும் இல்லை என்றார். இதுவே என்னுடைய வீடாக இருந்தால் என்னுடைய அம்மா தூங்கி எழுந்ததும் காபி போட்டு என்னுடைய கையில் கொடுத்துவிடுவார்கள் என்றார். அப்போ எதற்கு அடம்பிடித்து தனியாக வந்தீர்கள். சொகுசாக வளர்ந்த நீங்கள் அங்கேயே இருக்க வேண்டியதுதானே என்றார் மீனா.

37

டைனிங் டேபிள்

Image Credit :

JioHotstar

டைனிங் டேபிள்

இப்படி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே ஏற்கனவே புக் செய்து வைத்திருந்த டைனிங் டேபிள் வந்தது. இப்போதைக்கு டைனிங் டேபிள் மட்டும் தான். இனி போக போக ஒவ்வொன்றாக வந்துவிடும் என்றார். சரி, டைனிங் டேபிள் எவ்வளவு? உங்களுக்கு காசு ஏது என்று மீனா கேட்க, கோபமடைந்த செந்தில் சும்மா சும்மா காசு காசுன்னு எப்போ பார்த்தாலாயும் அதிலேயே குறியா இருக்க. நான் யாரு, எவ்வளவு பெரிய ஆளு என்றார்.

47

டைனிங் டேபிளின் விலை ரூ.42000

Image Credit :

JioHotstar

டைனிங் டேபிளின் விலை ரூ.42000

அப்போது தான் இந்த டைனிங் டேபிளின் விலை ரூ.42000 என்றார். அதற்கு ரூ.42 ஆயிரத்திற்கு டைனிங் டேபிள் தேவையா என்று மீனா கேட்க, ரொம்பவே கூலாக ஆமாம் வேண்டும் என்றார். சமைக்க பாத்திரம் இல்ல, காய்கறிகள் இல்ல, பால் போட்டு குடிக்க கூட பால் இல்ல என்று மீனா ஒவ்வொன்றாக அடுக்க, டைனிங் டேபிள் மட்டும் வாங்கியாச்சு. இப்போது இதை வாங்கியிருக்கிறீர்கள். இதில் உட்கார்ந்து என்னத்த சாப்பிடுவீர்கள் என்று மீனா கேட்டார்.

57

பணத்துக்கு என்ன பண்ணுனீங்க?

Image Credit :

JioHotstar

பணத்துக்கு என்ன பண்ணுனீங்க?

பணத்துக்கு என்ன பண்ணுனீங்க? இதையும் கடனுக்கு தான் வாங்குனீர்களா? என்று கேட்ட மீனாவிற்கு நான் ஏன் கடனுக்கு வாங்க வேண்டும். எல்லாவற்றையும் ரொக்கமாகத்தான் வாங்குனேன். இதை அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்த மீனாவிற்கு மற்றொரு ஷாக் கொடுத்தார் செந்தில். அதாவது, மிஸ்டர் பாண்டியன் ரூ.10 லடச்ம் கொடுத்தார் அல்லவா, அந்த பணம் தான். அதிலிருந்து தான் எடுத்து செலவு செய்தேன். ஏன் எடுத்தேன் எந்த நம்பிக்கையில் எடுத்தேன் எல்லாவற்றிற்கும் நான் விளக்கம் கொடுத்துவிடுகிறேன். பணம் விஷயத்தை பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம். இப்போதைக்கு பால், காய்கறி, சமைக்க தேவையான பாத்திரம் என்று எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார். அவர் புறப்பட்டதும், வீட்டை பூட்டி சாவியை கால் மிதிக்கு அடியில் வைத்துவிட்டு மீனா தனது மாமனார், மாமியார் வீட்டிற்கு சென்றார்.

67

கோமதி மற்றும் ராஜீ

Image Credit :

Vijay Television

கோமதி மற்றும் ராஜீ

கோமதி மற்றும் ராஜீ இருவரும் மீனாவின் நினைப்பில் இருந்தனர். பாண்டியன், தங்கமயில், கதிர், அரசி என்று எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பாண்டியன் கோமதியை கூப்பிடார். ஆனால், அவர் மீனாவின் நினைப்பில் இருந்தார். ராஜியோ இன்று நாம் இருவரும் சென்று அக்கா, மாமாவை பார்த்துவிட்டு வரலாமா என்று கோமதியிடம் கேட்க, அதற்கு இல்லை, இல்லை, நான் இப்படியே இருக்க பழகிக் கொள்கிறேன். அதான், அவர்கள் இருவரும் வார கடைசியில் வருவதாக சொல்லியிருக்கிறார்களே, அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றார் கோமதி. உடனே குறுக்கிட்ட தங்கமயில் நீங்கள் தான் இப்போது அவரை நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால், அவர்கள் இருவரும் ரொம்பவே ஜாலியாக இருப்பார்கள் என்றார்.

77

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு

Image Credit :

Vijay Television

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு

அப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே அட அட அட என்ன வாசனை என்று சொல்லிக் கொண்டே வீட்டிற்கு வந்தார். அவரைப் பார்த்ததும் வீட்டில் உள்ள அனைவரும் ரொம்பவே ஹேப்பி. பிறகு ஒரு தட்டு எடுத்து வந்து சாப்பிட உட்கார்ந்து இட்லியை எடுத்து வைத்து சாப்பிட்டார். கூடவே பருப்பு சாம்பார், சட்னி என்று ஊற்றி சாப்பிட ஆரம்பித்தார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்

Read Entire Article