மகளின் திருமண நகைகளைத் தவறவிட்ட குடும்பம்.. மீட்டுக் கொடுத்து உதவிய தூய்மைப் பணியாளர்..

2 hours ago 18

Last Updated:Feb 08, 2026 9:06 PM IST

துரையின் நேர்மையைப் பாராட்டி, திருவாரூர் நகரக் காவல் நிலையத்தினர் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்தனர். அவருக்கு புத்தாடைகள் வழங்கியும் கௌரவித்தனர்.

News18
News18

மகளின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்த 20 சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களைத் தவறவிட்ட குடும்பத்தினருக்கு, ஒரு தூய்மைப் பணியாளரின் நேர்மை பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

சென்னை கூடுவாஞ்சேரி குப்புசாமி நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் அக்சயா தேவிக்கு அடுத்த மாதம் 8-ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் திருமணம் நடைபெற உள்ளது.

இதற்காகச் சேர்த்து வைத்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை, உறவினர் வீட்டில் கொடுத்து வைப்பதற்காக எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதற்காக திருவாரூர் விருப்பாச்சி தெருவில் இருந்து ஆட்டோ மூலம் புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்றபோது, நகைகள் இருந்த பையை ஆட்டோவின் பின்புறம் வைத்ததாகவும்  எதிர்பாராதவிதமாக அந்தப் பை தவறி கீழே விழுந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த பையை கண்டெடுத்த தூய்மைப் பணியாளர் துரை, தங்க நகைகள் இருப்பதைக் கண்டு உடனடியாக காவல் நிலையத்துக்கு சென்று ஒப்படைத்தார்.

மற்றொரு புறம் நகைகளை தேடிக்கொண்டிருந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தினரை காவல் நிலையத்துக்கு வரவழைத்த காவல் துறையினர், அவர்களிடம் நகைகளை ஒப்படைத்தனர்.

Read Entire Article