Last Updated:Feb 26, 2026 6:25 PM IST
சென்னை நகருக்குள் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராமாபுரத்தில் மொட்டை மாடியில் தூங்கிய பெண் மறுநாள் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் முகப்பேர் அருகே சாலையில் வசித்துவந்த பெண்ணும் அடித்தே கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை சம்பவங்களின் திடுக்கிடும் பின்னணி என்ன?
சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் 37 வயதான புஷ்பா. இவர் தனது கணவரைப் பிரிந்து 16 வயது மகளுடன் 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் புஷ்பாவுக்கும், உறவினர் கார்த்திக் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு மொட்டை மாடியில் தூங்குவதற்காக புஷ்பா சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த கார்த்திக் புஷ்பாவிடம் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இருவரும் பேசிக் கொண்டிருப்பதை புஷ்பாவின் மகள் இரவு 11 மணி அளவில் மாடிக்கு வந்து பார்த்துள்ளார். பின்னர் வீட்டிற்குச் சென்று புஷ்பாவின் மகள் தூங்கிவிட, மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அம்மா கீழே இறங்கி வரவில்லை என்பது தெரியவந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த மகள் உடனே மாடிக்கு ஓடிச் சென்று பார்த்த போது அதிர்ந்து போனார். அங்கு தாய் புஷ்பா சடலமாக விழுந்து கிடப்பதைக் கண்டு உறைந்து போனார் அந்த சிறுமி. அழுகை சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து ராமாபுரம் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த புஷ்பாவின் உடலைக் கைப்பற்றி கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புஷ்பாவின் உறவினரான கார்த்தியை தேடி வருகின்றனர். முதற்கட்ட தகவலில் புஷ்பா கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், கார்த்தியைப் பிடித்த பின்னரே முழு தகவல் தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர்.
இதேபோல், சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் சாலையோரம் தங்கி பிழைப்பு நடத்திவந்த 52 வயது மதிக்கத்தக்க பெண் அடித்தே கொலை செய்யப்பட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெ.ஜெ.நகர் போலீசார் 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருகில் மதுபோதையில் படுத்துக் கிடந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் முகப்பேர் பகுதியை சேர்ந்த 28 வயதான ஷேக் என்பது தெரியவந்துள்ளது.
சென்னை நகருக்குள் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாடியில் தூங்கிய பெண் மர்டர்... வீதியில் வசித்துவந்த பெண் அடித்துக் கொலை... சென்னையில் அடுத்தடுத்த 2 கொலைகள்...
.png)







English (US) ·