ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான். - படம்: ஊடகம்
சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் காணொளிகளைப் பார்த்துப் பாடகர்களையும் இசையமைப்பாளர்களையும் தான் அடையாளம் காண்பதாக ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரகுமான் கூறியுள்ளார்.
அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சியை ஸ்ருதி ஹாசன் வழிநடத்தினார்.
“இந்தியாவில் நிறைய இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு வாய்ப்பு வழங்குகிறேன். அதற்குச் சமூக ஊடகம் பெரிதும் உதவுகிறது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தி மொழியைக் கற்றுக்கொண்டது குறித்து கேட்டபோது, “இசைக்கு மொழி இல்லை, ஆனால் பாடல் வரிகளுக்கு மொழி இருப்பதால் அதைக் கற்றுக்கொள்ளும் தேவை ஏற்படுகிறது. எல்லா மொழிகள்மீதும், எல்லா கலாசாரத்தின் மீதும் மரியாதை இருக்கிறது,” என்றார் ரகுமான்.
மேலும், தமக்குப் பிடித்த மேற்கத்திய இசையமைப்பாளர்கள் குறித்தும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ‘தி பீட்டல்ஸ் ’ சகோதரர்களின் இசையைக் கேட்டு ரசித்தது பற்றியும் அவர் பேசியிருக்கிறார்.