பாலன் இல்லம் அருகேயே பாஜக அலுவலகமும் இருப்பதால் முன்னெச்சரிக்கையாக அந்த அலுவலகத்துக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
Published:4 mins agoUpdated:4 mins ago

டெல்லியின் காக்ரோச் ஜனதா பார்ட்டியின் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையிலும், சென்னையிலும் காக்ரோச்களின் போராட்டம் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது.

Cockroach Protest
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி போராடிய மாணவர்களை காவலர்கள் தடியடி நடத்தி கலைத்திருந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் மற்றும் காக்ரோச் பார்ட்டியினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் போராட்டத்தை தொடங்கினர்.
பகல் வேளைகளில் குறைவான மாணவர்களே போராடினாலும் மாலையிலிருந்து பாலன் இல்லம் நோக்கி நூற்றுக்கணக்கான மாணவர்கள் வரத் தொடங்குகின்றனர். இன்று (ஜூலை 22) இரவு மட்டும் கிட்டத்தட்ட 1000 மாணவர்களும் இளைஞர்களும் பாலன் இல்லத்தில் கூடியிருந்தனர். நடனம், பாடல், நாடகம், மீம்ஸ் என விதவிதமான கலைகளின் வழி நீட்டுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

House full Board
இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்களும் போராட்டத்துக்கு வந்து ரீல்ஸ்களை வெளியிட தொடங்கியிருப்பதால், சமூகவலைதளங்களிலும் போராட்டம் வேகமாக பரவி வருகிறது. அதிகப்படியான இளைஞர்கள் கூடியதால் பாலன் இல்லத்தின் ஒரு பக்கத்தில் ஹவுஸ்புல் போர்டே மாட்டி வைத்திருக்கின்றனர். நாளுக்கு நாள் இளைஞர்களின் வருகை அதிகரிப்பதால் காவல்துறையினர் அதிகளவில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். உளவுத்துறையினரும் ஸ்பாட்டில் அதிக எண்ணிக்கையில் கூடி போராட்டத்தின் போக்கை நோட் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பாலன் இல்லம் அருகேயே பாஜக அலுவலகமும் இருப்பதால் முன்னெச்சரிக்கையாக அந்த அலுவலகத்துக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
.png)





English (US) ·