குற்றவாளியான சான் பிங்யி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Doctor Jailed for Causing Patient's Death
Doctor Chan Bingyi, 38, was sentenced to one year and six months in prison for causing a patient's death due to negligence. On March 8, 2019, at Revival Medical & Aesthetics Centre, Chan administered an unneeded, large dose of EDTA to 31-year-old Lau Li Ting. Ms. Lau, who had no underlying health condition, suffered EDTA intoxication and a heart attack, passing away five days later at Singapore General Hospital.
Generated by AI
கவனக்குறைவுடன் மேற்கொண்ட செயல் காரணமாக நோயாளியை உயிரிழக்கச் செய்த மருத்துவருக்கு ஓராண்டு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சான் பிங்யி எனும் அந்த 38 வயது மருத்துவர், லாவ் லி டிங் எனும் 31 வயது சொத்து முகவருக்குத் தேவையில்லாத சூழலில் இடிடிஏ (EDTA) எனும் மருந்தை நரம்பு வழியாகச் செலுத்தியுள்ளார். கனரக உலோகத்தால் உடலில் நச்சு சேர்வது போன்ற குறிப்பிட்ட சில பிரச்சினைக்கு ஒருவர் ஆளாகும்போதுதான் இடிடிஏ தரவேண்டும். அதைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி பெற்றோர் மட்டுமே அவ்வாறு செய்ய அனுமதி உள்ளது.
சான் பிங்யி, இடிடிஏவை திருவாட்டி லாவுக்கு குறுகிய நேரத்தில் அதிக அளவில் தந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர். பிராஸ் பாசா ரோட்டில் உள்ள ரிவைவல் மெடிக்கல் & ஏஸ்தெட்டிக்ஸ் சென்டரில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதி அச்சம்பவம் நிகழ்ந்தது.
பெரிய உடல்நலப் பிரச்சினை ஏதும் இல்லாதிருந்த திருவாட்டி லாவ், இடிடிஏ நச்சுத்தன்மை பிரச்சினைக்கு ஆளானார். அதனைத் தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
திருவாட்டி லாவ், ஐந்து நாள்களுக்குப் பிறகு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் உயிரிழந்தார்.
.png)







English (US) ·