வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்க்கு அரசு நலத் திட்டங்கள் இல்லை

51 minutes ago 8

cec9a9e7-442f-4547-bcbc-7e80e95439fe

சாம்ராட் சௌத்ரி தலைமையிலான பீகாரிலும், சுவேந்து அதிகாரி தலைமையிலான மேற்கு வங்கத்திலும் நலத்திட்டங்களை வழங்குவதற்கான அடிப்படையாக எஸ்ஐஆர் பெயர் பட்டியல் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. - படம்: நியூஸ்18

SIR Goes Beyond Polls As Bengal, Bihar Vow To Bar Deleted Names From Social Welfare Schemes

West Bengal announced individuals removed from the elector list via Special Intensive Revision (SIR) cannot receive government welfare benefits, though those appealing will continue benefits until a decision. CAA applicants can access all schemes, stated Minister Ashok Kirttania. Similarly, Bihar CM Samrat Chaudhary declared those removed from elector lists will lose all government benefits, including ration items, and their bank passbooks will be cancelled. Bihar Minister Ashok Choudhary noted approximately 500,000 people were removed from the state's ration cardholders list after the SIR process.

Generated by AI

கோல்கத்தா/பாட்னா: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையின் (எஸ்​ஐஆர்) கீழ் வாக்​காளர் பட்டியலில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர்​கள் அரசு நலத்​திட்ட உதவிகளைப் பெற முடி​யாது என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

எனினும், எஸ்​ஐஆர் நடவடிக்​கை​யில் பெயர் நீக்கப்​பட்​டதற்கு எதி​ராக முறை​யீடு செய்தவர்களுக்கு, தீர்ப்புத் தெரியும்வரை நலத்திட்ட உதவி தொடரும். அதன் பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்​று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குடி​யுரிமைத் திருத்​தச் சட்​டத்​தின்கீழ் குடியுரிமை கோரி விண்​ணப்பித்​துள்​ளவர்​கள் அனைத்து அரசுத் திட்டங்​களை​யும் பெறலாம். குடும்ப அட்​டைகள் சரி​பார்க்கப்படும்,” என்று மேற்கு வங்க உணவு வழங்கல் துறை அமைச்​சர் அசோக் கீர்த்​தனியா கூறினார்.

எஸ்​ஐஆர் நடவடிக்கையின்கீழ் வாக்​காளர் பட்டியலில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர்​கள் அரசு நலத்​திட்ட உதவிகளைப் பெறமுடி​யாது என்று மேற்கு வங்கம், பீகார் அரசுகள் அறிவித்துள்ளன.

எஸ்​ஐஆர் நடவடிக்கையின்கீழ் வாக்​காளர் பட்டியலில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர்​கள் அரசு நலத்​திட்ட உதவிகளைப் பெறமுடி​யாது என்று மேற்கு வங்கம், பீகார் அரசுகள் அறிவித்துள்ளன. - படம்: மை மகான்ஹர்

அதேபோல், பீகாரில் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​ட​வர்​கள், மலிவு விலை விற்பனைப் பொருள்​கள், பிற நலத்​திட்​டங்​கள் உட்பட எந்​தவொரு அரசு சலுகை​யை​யும் பெற முடி​யாது. இவர்களின் வங்கி கணக்குப் புத்​தகங்​களும் உரிய காலத்​தில் நீக்கப்​படும் என்று பீகார் முதல்​வர் சாம்​ராட் செளத்ரிஅறிவித்துள்ளார்.

மாநிலத்​தில் எஸ்​ஐஆர் நடவடிக்​கைக்குப் பிறகு, குடும்ப அட்​டை​தா​ரர்​களின் எண்ணிக்கையில் ஏறக்குறைய 500,000 பேர்​ நீக்​கப்​பட்​டுள்​ளதாக பீகார் உணவு, நுகர்​வோர் பாது​காப்​புத் துறை அமைச்​சர் அசோக் சௌத்ரி கூறினார்.

Read Entire Article