"இது வெறும் தொடக்கம் மட்டுமே.." - தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்!

2 hours ago 7

Last Updated:October 15, 2025 7:55 AM IST

Weather Update | ராமநாதபுரம் முதல் சென்னை வரை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

 தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், சென்னையில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

இதற்கிடையே, ராமநாதபுரம் முதல் சென்னை வரை தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கடலில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை நோக்கி ஏராளமான மேகங்கள் நகர்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, சென்னையில் இரவு முதல் காலை வரை, மழை பரவலாக பெய்யும் என்றும் அவர் கணித்துள்ளார். மேலும், நாளை பருவமழை தொடங்க உள்ளது என்றம் குறிப்பிட்டுள்ள தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், இது வெறும் ஒரு தொடக்கம் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, சென்னையில் இரவு முதல் காலை வரை, மழை பரவலாக பெய்யும் என்றும் அவர் கணித்துள்ளார். மேலும், நாளை பருவமழை தொடங்க உள்ளது என்று குறிப்பிட்டுள்ள தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், இது வெறும் ஒரு தொடக்கம் மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

"இது தொடக்கம் மட்டுமே.." சென்னையில் மழை எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்!

"இது வெறும் தொடக்கம் மட்டுமே.." - தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்!

  • தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

  • சென்னையில் இரவு முதல் காலை வரை பரவலாக மழை பெய்யும் - தமிழ்நாடு வெதர்மேன்

  • ராமநாதபுரம் முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article